பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் முதுகலை வரலாற்று துறை சார்பாக ஒரு நாள் மரபு நடைபயணம் 08.02.23 புதன்கிழமை அன்று பாளையங்கோட்டை சுற்றியுள்ள வரலாறு, பண்பாட்டு விழுமியங்கள் உள்ளடக்கிய பகுதிகளை அறிந்து கொள்ளும் பொருட்டு இம் மரபு நடை பயணம் நடைபெற்றது.
மேலும் இந் நடை பயணத்தில் பாளையங்கோட்டையின் பழைய கோட்டை, பாளை நூற்றாண்டு மண்டபம் , சைவ சபை , ரேணியஸ் கல்லறை ,தெற்கு பஜார் ராம் லாலா இனிப்பகம், லூர்து நாதன் சிலை, கிளாரிந்தா தேவாலயம் , ஆஷ் கல்லறை உட்பட அரசு தொல்லியல் அருங்காட்சியகம் வரை மாணவர்கள் நேரடியாக சென்று அதன் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டனர். மேலும், இம் மரபு நடை பயணமானது மாணவர்களுக்கு விடுதலை போராட்டத்தில் திருநெல்வேலியின் பங்கினை தெரிந்து கொள்ள உதவியதோடு காலனிய காலகட்டத்தில் பாளையங்கோட்டையில் நடந்த சமூக, சமய பண்பாட்டு இயக்கங்களின் பங்களிப்பை அறிந்து கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்தது. முன்னதாக இந் நிகழ்வினை கல்லூரியின் முதல்வர் முனைவர் சே.மு. அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்த இந்நிகழ்வினில் , கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் செய்யது முஹம்மது காஜா வாழ்த்துரை வழங்கினர்.
மாணவர்களுக்கு ஏற்பட்ட ஐயங்களை போக்கும் விதமாகவும் விரிவான வரலாற்று தகவல்களை வரலாற்றாய்வாளர் செ.திவான் , எழுத்தாளர் நாரம்புநாதன் , சைவ சபை முன்னாள் நிர்வாகி காந்தி , ராம்லாலா இனிப்பக அதிபர் அரவிந்த், அரசு அருங்காட்சியக காப்பாளர் சத்தியவள்ளி கல்லூரியின் வரலாற்றுத் துறை தலைவர் நசீர் அஹமது உட்பட பலர் நேரடியாக மரபு நடைபயணத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை மாணவர்களுக்கு வழங்கினர்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட வரலாற்று துறை மாணவர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வினை கல்லூரியின் வரலாற்று துறை தலைவர் முனைவர் நசீர் அஹமது, முனைவர் முஹைதீன் பாதுஷா, பேரா அப்துல் அஜிஸ், பேரா ஜெமி மெர்லின் ராணி, பேரா சாகுல் ஹமீது , பேரா ஆஷா , பேரா அப்துல் கலாம், பேரா சைதாலி , பேரா ஷாம்லி , பேரா அப்சல் ஆகியோர் செய்திருந்தனர்.


