தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மணக்கரையில் உள்ள மலை பார்வதி அம்மன் கோவில் கொடை விழா நடந்தது. இதையட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. மலை அடிவாரத்திலும், மலை மேல் உள்ள அம்மனுக்கும் சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. அதன் பின் பொதுமக்கள் அம்மனுக்கு பொங்கல் படைத்தனர். தொடர்ந்து மொட்டை போட்டு நேர்ச்சையை செலுத்தினர். அதிகாலை முதலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மீது ஏறினர். அவர்களுக்கு மோர்தானம் பக்தர்கள் சார்பாக வழங்கப்பட்டது. இதையட்டி அனைத்து பக்தர்களால் நடத்தப்படும் அன்னதானம் காலையில் துவங்கியது.
இந்த அன்னதானத்தை துவக்கி வைத்த கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் துவக்கி வைத்தார். திருவிழாவில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சமூக ஒற்றுமை கருதி ஆறாம் பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சேக் அப்துல்காதர் உள்பட பலர் கலந்துகொண்டனர். துளிர்கரம் அறக்கட்டளை நண்பர்கள் குழு சார்பில் ஆறாம் பண்ணை சின்னத்துரை தேவர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சப்பர பவனியும். மறுநாள் மாட்டு வண்டி ரேசும் நடைபெற உள்ளது.


