வல்லநாடு வனத்துறை சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது.தூத்துக்குடி மாவட்ட வனப்பாதுகாவலர் முருகன் உதவி வனப்பாதுகாவலர் சக்திவேல் அறிவுறுத்தலின் பேரில் வல்லநாடு வனசரகத்தின் சார்பில் உலக ஈரநிலநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டுப் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஓவியப் போட்டி, வாசகம் எழுதும் போட்டிகள் வல்லநாடு வி.டி.வி.தெய்வநாயகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதற்கான பரிசளிப்பு விழா வல்லநாடு முருகன் புரம் வனசரக அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் சக்திவேல் விழாவிற்குத் தலைமை தாங்கினார். உதவி வனப்பாதுகாவலர் தமது தலைமை உரையில் நீர் நிலைகள், வன உயிரினங்கள் மற்றும் வன பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பு பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். இதற்கான விழிப்புணர்வைப் பெற்றோர்களிடமும் பொதுமக்களிடமும் மாணவ மாணவிகளால் மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார் வன சரகர் பிருந்தா அனைவரையும் வரவேற்று பேசினார்.போட்டிகளில் வெற்றி பெற்றவல்லநாடு பாரதி மழலையர் துவக்கப்பள்ளி லாவண்யா, தம்பு சுபாஷினி, ரஞ்சன கோமதி ஊராட்சி ஒன்றியத்துவக்கப்பள்ளி சந்தியா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கனகராஜ், சுஜாதா வி.டி.வி.தெய்வநாயகம் அரசு மேல்நிலைப் பள்ளி கார்த்திகா ,துர்கா, கோபிகா, முத்து மனீஷா சாரா மெட்ரிக் பள்ளி கரிஷ்மா, தம்பிராட்டி, இசக்கி ராஜா, அபிநயா, மகாலட்சுமி துளசி கல்லூரி உதயபாரதி, தங்கம், பாலா காசிலிங்காபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாரி செல்வி, சுஜிதா, பராசக்தி கீழ செக்காரக் குடி அரசு மேல்நிலைப் பள்ளி கஸ்தூரி, அருள் முத்து ஆகிய மாணவ மாணவிகளுக்கு மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் சக்திவேல் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.விழா ஏற்பாடுகளை வனவர் கண்ணன், அப்பன சாமி, பழனி மற்றும் வனக்காப்பாளர்கள் வனக்காவலர்கள் வேட்டை தடுப்புக்காவலர்கள் செய்திருந்தனர்


