தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்டது முறப்பநாடு கிராமம் ஆகும்.இந்த கிராம்த்தில் காவல் நிலையம், பத்திர பதிவு அலுவலகம், மத்திய அரசின் குடிநீர் வாரியம் மற்றும் புகழ் பெற்ற கைலாசநாதர், பெருமாள் ஆலயம் ஆகியன அமைத்துள்ளது. இதனால் இங்கு நாள் தோறும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நூற்று கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.இத்த கிராமமான முறப்பநாடு, பேருந்து நிறுத்தம் முதல் மருதூர் அணை கட்டுவரை தார்சாலை அமைக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.முதல் கட்டமாக பழைய சாலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டு பிறகு சாலை முழுவதும் ஜல்லி கற்க்கள் பரப்பபட்டு,செம் மண்ணால் சாலை அமைக்கப்பட்டது.பின்னர் இந்த சாலை அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும் என கிராம மக்கள் எதிர்பார்த்த நிலையில் கடந்த பல மாதங்களாகவே இந்த தார்சாலை அமைக்கும் பணியானது கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள், நடந்தோ அல்லது இரு சக்கர வாகனத்திலோ செல்ல மிகுந்த சிரமம் அடைகிறார்கள்.மேலும் இந்த சாலையை அமைக்க ஒப்பந்தம் பெற்ற ஒப்பந்ததாரர் தான் வசவப்பபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அனவரதநல்லூர் அரசு உயர்நிலை பள்ளி முதல் சமத்துவபுரம் வரையிலான தார்சாலையை அமைக்கும் ஒப்பந்தத்தையும் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த அனவரதநல்லூர் முதல் சமத்துவபுரம் வரையிலான சாலையும் இதே போலவே பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அரைகுறையாகவே கிடப்பில் போடப்பட்டுள்ளது.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர் இனியும் காலம் கடந்தாமல் விரைவாக தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும் படி வேண்டி கேட்டு கொள்கிறேன்.
வசவப்பபுரம் மு.கணேசன்


