தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டைச் சேர்ந்தவர் இசக்கிராஜன் மகள் மாரியம்மாள் என்ற இளம்பெண். இவர் கடந்த 26ம் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் அவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை இசக்கிராஜன் முறப்பநாடு போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்த காணாமல் போன மாரியம்மாளை தேடி வருகின்றனர்.


