வல்லநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வனத்துறை சார்பில் போட்டிகள் நடந்தன. தமிழ்நாடு வனத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட வனப்பாதுகாவலர் முருகன் உதவி வனப்பாதுகாவலர் சக்திவேல் அறிவுறுத்தலின் பேரில்உலக ஈர நிலநாளை முன்னிட்டு வல்லநாடு வி.டி.வி.தெய்வநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி, க ல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, வாசகம் எழுதும் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை வல்லநாடு அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மோகன் தலைமையில் வனச்சரகர் பிருந்தா துவக்கி வைத்தார் போட்டியில் வல்லநாடு பாரதி மழலையர் துவக்கப்பள்ளி, வல்லநாடு பஞ்சாயத்து துவக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி துளசி மகளிர் கல்லூரி வல்லநாடு அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பள்ளி, கல் லூரி மாணவ மாணவிகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.போட்டிக்கான ஏற்பாடுகளை வனவர் கண்ணன், அப்பன சாமி, பழனி மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்புக்காவலர்கள் செய்திருந்தனர்


