தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் ஆறாம்பண்ணைகிராமத்தில் மகான் காஜாமுகைதீன் தர்கா கந்தூரி விழா ஆண்டு தோறும் மிகச் சிறப்பாக யானை மீது கொடியேற்றத்துடன் நடைபெறும். பழமை மாறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு யானை பெர்மிட் கிடைக்காத பட்சத்தில் இந்த ஆண்டு கொடி வழக்கத்துக்கு மாறாக ஆட்டோ மேல்கொடி எடுக்கப்படுகிறது. ஆறாம்பண்ணையில் முதல் முதலாக ஆட்டோ மேல் கொடி எடுக்கப்படுகிறது தெரு சாலை வீதி வழியாக மீண்டும் காஜா தர்காவில் இருந்து கொடி ஏற்றப்படும்இந்த ஏற்பாட்டைகாஜா தர்கா நிர்வாகம் கமிட்டினர் செய்து வருகினர். அமீன் பஷீர் அகமது, முகமது அலி ஜின்னா, இப்ராஹிம், உமர் கத்தாப், சேக், அப்துல் ரகுப், யாசின். பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
இந்த கந்தூரி விழாவில் ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்களும் கண்டு களித்தனர். பழமைக்கு மாறாக நடந்ததால் ஆட்சியத்துடன் மக்கள் கந்தூரி விழா கொண்டாடினார்கள். விழா முடிவில் கொடி ஏற்றப்பட்டு பொது மக்களுக்கு தப்ரூக் என்ற நேச்சை வழங்கப்பட்டது.


