தை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்.
தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பது வழக்கம். இந்த நாட்களில் நீர்நிலைகளுக்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பார்கள்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் அணைக்கட்டு பகுதியில் அதிகாலை முதலே ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி அங்கு உள்ள படித்துறையில் இருந்த அர்ச்சகர்களிடம் தங்களது முன்னோர்களின் பெயர்களை கூறி அவர்களுக்கு தர்பணம் கொடுத்தனர். அதன்பின்னர் அவர்கள் மீண்டும் தாமிரபரணி ஆற்றில் நீராடினர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்.


