திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையம் மற்றும் கன்னியாகுமரி லெமூரியா ஆய்வு கழகம் இணைந்து நடத்திய கல்வெட்டு வாசிப்பு பயிற்சி கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரி பேராசிரியர் ஆமோஸ் தலைமை வகித்தார் .ஊர் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். கோவிலில் மொத்தம் 21 கல்வெட்டுகள் இருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கோவில் கருவறை இடதுபுறச்சுவரில் உள்ள கல்வெட்டு சுத்தம் செய்யப்பட்டது.
இதில் கல்வெட்டு ராஜராஜசோழன் மகன் இராஜேந்திர சோழன் கல்வெட்டு என்பது தெரிய வந்தது. கல்வெட்டில் ஊரின் பெயர் ராஜராஜ பாண்டிய நாட்டு உத்தம சோழ வடநாட்டு குமரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது இறைவன் பெயர் ராஜராஜ ஈஸ்வரன் உடையார் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் கோவிலுக்கு முள்ளிநாட்டு மதில் குறிச்சியைச் சேர்ந்த அதாவது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடை க்குறிச்சியை சேர்ந்த வெள்ளாளன் வெள்ளாளன் அப்பி பொன்னான் அடியேன் அவரது தம்பி எப்பி நாராயணக்காக ஒரு நந்தா விளக்கு தானமாக வழங்கி விளக்க வசதியாக 25 ஆண்டுகளை தானமாக விளங்கியதையும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் வாயிலாக அந்த விளக்கு சூரியன், சந்திரன் உள்ளளவும் எரிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் கோவில் உள்ள காலத்தில் பழமையான கல்வெட்டு முதலாம் பராந்தக சோழன் (907-953 )காலத்தில் உள்ள பழமையான வட்டெழுத்து கல்வெட்டாகும். கல்வெட்டில் பராந்தகச் சோழன் கோப்பர கேசரி என்று குறிப்பிடப்படுகிறார் . நாஞ்சில் நாட்டு திருச் சிவீந்திரத்து மகாதேவர் என்று இறைவன் குறிப்பிடப்படுகிறார். இக்கல்வெட்டு பராந்தகச் சோழனின் 31- ஆம் ஆட்சி ஆண்டுகள் கல்வெட்டாகும். அதற்கு அருகில் அவரது 34 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்றும் உள்ளது.
எனவே இவர் காலத்தில் 938 ஆம் ஆண்டில் கோவில் கட்டுவிக்கப்பட்டு இருக்கலாம். கல்வெட்டில் கோவிலில் தொடர்ந்து எரியக்கூடிய நந்தா விளக்கு ஒன்று தானமாக வழங்கி அதன் செலவிற்காக 50 ஆடுகளை தனமாக வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது .மேலும் விளக்கின் ஒவ்வொரு முறை எண்ணெய் விடும்போதும் ஒரு ஆழாக்கு மட்டுமே ஊற்ற வேண்டும். விளக்கு முட்டாமல் அளவாக எண்ணெய் ஊற்றப்பட வேண்டும் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆய்வில் முனைவர் பட்ட ஆய்வாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள், இல்லத்தரசிகள் திரளாக பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி வரலாறு பண்பாட்டு கள ஆய்வு மைய இயக்குனர் மாரியப்பனை இசக்கி, கன்னியாகுமரி லெமூரியா ஆய்வுக்கழக செயலாளர் பேராசிரியர் ஆமோஸ் ஆகியோர் செய்திருந்தனர்.


