தென்காசி என்றாலே சிறப்பு மிக்க ஊராகும். வடக்கில் உள்ள காசியை போலவே தெற்கே பாரக்கிரம பாண்டிய மன்னன் உருவாக்கிய ஊர் தான் இந்த ஊர். இந்த ஊருக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. தென்காசி, தெட்சின காசி, செண்பக வனம், பலாலிங்கப்பாடி என்று பல பெயர்கள் உண்டு. தற்போது தென்காசி மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் இந்த ஊர் முற்காலத்தில் சேர பாண்டிய நாட்டு எல்கையாக விளங்கியுள்ளது. இங்குள்ள சித்ரா நதியை வடகிலிருந்து தெற்காக பாயும் நதியாக பாண்டிய மன்னன் மாற்றி அமைத்தான். அதோடு மட்டுமல்லாமல் உலகம்மை சமேத விசுவநாதர் ஆலயத்தினை கட்டினான். இந்த ஆலயத்தில் பல்வேறு சிறப்புகளை வைத்தான். இங்கு தமிழ் தாயாக விளங்கும் தமிழணங்கிற்கு சிலை உள்ளது. பொதிகை மலையில் தோன்றும் தென்றல் கோபுர வாசல் வழியாக இருபுறமும் சென்று வருவோர் முகத்தினை வருடும் வண்ணமாக அமைத்துள்ளார்கள். இது மிகவும் சிறப்பானதாகும். இந்த பகுதியில் ஆட்சி செய்ய குறுநில மன்னன் வடகரை மன்னன். இவர்களில் சின்னணஞ்சத் தேவர் என்பவர் சிறப்பு மிக்கவராக ஆட்சி புரிந்துள்ளார். குற்றாலம் கோயிலுக்கும், பண்பொழி முருகன் கோயிலுக்கும் பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளார். இவரின் தாத்தா சின்னநேந்திர பாண்டியன். இவர் பூலித்தேவனின் கை கோர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தான் தென்காசி சிற்றாற்றில் யானைப்பாலத்தினை கட்டியுள்ளார் என்று வரலாறு கூறுகிறது. அவர் கட்டிய தேதி குறிப்பின் படி இந்த யானைப்பாலத்துக்கு இன்றோடு 369 வது பிறந்த நாள் விழா.

வடகரை மன்னன் குறித்த பதிவுகளை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்ட நெல்லை ஜமீன்கள் என்ற நூலில் காணலாம் . தற்போது தென்நாட்டு ஜமீன்கள் என்ற தலைப்பில் காவ்யா பதிப்பகம், முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய 22 ஜமீன்களை தொகுத்து 1000 ம் பக்கத்தில் மிகப்பெரிய நூலாக வெளியிட்டுள்ளது. அதை பெறுவதற்கு 8760970002 என்ற எண்ணில் உங்கள் விலாசத்தினை அனுப்பி வைத்தால் நூல் உங்கள் வீடு தேடி வரும். பணத்தை கொடுத்து நூலை பெற்றுக்கொள்ளலாம். இன்று தான் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கும் பிறந்த நாள். என்ன பொருத்தம் பார்த்தீர்களா ?ஆகவே தான் இன்று தென்காசி யானைப்பாலத்தினை பற்றி பதிவிடுகிறேன்.
அது என்ன யானைப் பாலம். பல யானைக்கூட்டம் சென்றாலும் கூட இந்த பாலம் உறுதியாக மூன்னூறு வருடங்களை தாண்டி கம்பீரமாக நிற்கிறது என்பதாலா? அல்லது யானை உருவம் பாலத்தில் பொறிக்கப்பட்டு இருப்பதாலா? என்று யோசனை செய்தாலும் மக்கள் இந்த பாலத்தினை ஆசையோடு யானைப்பாலம் என்றே அழைககிறார்கள்.


