டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி கலந்து கொண்டு விருது வழங்கினார். நெல்லை சங்கர்நகர் அமோகாபேலசில் பொங்கல் தினவிழா சிறப்பு பட்டிமன்றம் மற்றும் சிறந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி, குத்து விளக்கேற்றி நிகழ்சச்யை துவக்கி வைத்தார். நிகழ்சியில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா, தமிழரசி மாலை ராஜா, போதீஸ் நிர்வாக இயக்குனர் முருகேஸ், தச்சை பகுதி திமுக செயலாளர் சுப்பிரமணியன், ரிச் கவுசிங் ஆதி கார்த்திக் , கண்ணன், மானூர் முன்னாள் சேர்மன் அ.கா.மணி, அம்பை சர்வோதயாக சங்க செயலாளர் கே.எஸ்.சுப்பிரமணியன், பால பாக்யா குழுமம் ஆறுமுக பாண்டியன், அப்துல்கலாம் இளைஞர் எழுச்சி இயக்கம் மாநில தலைவர் சி.ஐ.டி. ஆறுமுகம், சட்ட பாதுகாப்புக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நௌசாத், குரு மூர்த்தி, வழக்கறிஞர் கமலநாதன், மு.கா.அமீருதீன், தென்னிந்திய ஒருங்கிணைந்த பத்திரிக்கையாளர்கள் சங்கம் மாநில அமைப்புச் செயலளர் முகமது ஷாஜகான் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் கிருஷ்ணன் அவர்களுக்கு கல்வி பேரரசு என்ற விருதும், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்க பொருநை மைந்தன் விருதும், டி.கே.சரவணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், ஓவியர் வள்ளிநாயகத்துக்கு ஓவிய கலைஞானி என்ற விருதும், வெங்கடேசுக்கு நுகர்வோர் சிகரம், டாக்டர் பால்பாண்டிக்கு கைவினை கலைச்செம்மல், பீர் மஸ்தானுக்கு சேவை செம்மல், தோட்டக்குடி மாரியப்பனுக்கு நாதஸ்வர சக்கரவர்த்தி, நிஜாம் அவர்களுக்கு சமூக நல்லிணக்க தந்தை, டாக்டர் மதனுக்கு மருத்துவ திலகம், சுப்பிரமணியனுக்கு உழைப்பாளர் திலகம், ஆசான் முகமது ஜாபருக்கு தமிழர் கலை காவலர் விருதும், மரிய சூசை அவர்களுக்கு கல்வி சக்கரவர்த்தி ஆகிய விருதுகள் வழங்கப்பட்டது.அதன் பின் பண்டிகை கொண்டாட்டங்கள் பகட்டை காட்டுகிறதா பண்பாட்டை காட்டுகிறதா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது. டாக்டர் ஜெய.ராமமூர்த்தி நடுவராக இருந்தார்.பகட்டை காட்டுகிறது என்ற தலைப்பில் சுபாசிணி,தமிழ் நெஞ்சம், பூபாலம் பிரகதீஸ்வரன் ஆகியோரும் பண்பாட்டை காட்டுகிறது என்ற தலைப்பில் புதுகை பாரதி, பொள்ளாச்சி கண்ணையா, இங்கி பிரவீன் ஆகியோர் பேசினர். முன்னதாக நாட்டிய தாரகை ரசிகாவின் பரதநாட்டியம் நடந்தது. நிகழ்ச்சியை பார்வதி முத்தமிழ் தொகுத்து வழங்கினார்.
ஏற்பாடுகளை டிரிபில்-ஐ சர்வீஸ் நிருவனமும், நிகழ்ச்சி இயக்கத்தினை அண்ணா சிங்காரவேலும் செய்திருந்தனர்.


