திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூர் நகராட்சி பாடிக்குப்பம் உயர்நிலைப்பள்ளியில் பொங்கல் திருநாள் மற்றும் தேசிய இளைஞர் தினமான விவேகானந்தர் பிறந்தநாள் , சென்னை 93வது மாமன்ற உறுப்பினர் திருமதி S உமா அவர்களின் தலைமையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் இனிதே கொண்டாடப்பட்டது. இரண்டாயிரம் பழந்தமிழ் பாடல் வரிகளை மனப்பாடமாய் பாடி உலக சாதனை செய்த சிறுவர்களான , ஆவடி அரசு உதவி பெறும் SVT நடுநிலைப்பள்ளியில் பயிலும் S கிஷன் ஸ்ரீ , P .நளன் ஸ்ரீ ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பித்தனர். அண்ணாமலை கவிராயாரின் காவடிச்சிந்து பாடலை பாடியும், யோகாசனம் செய்தும் அனைவரின் பாராட்டுக்களையும், பல பரிசுகளையும் பெற்றனர். 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் , ஆசிரியர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர். காணொளிகளை Minnal Sri Childrens என்ற youtube சேனலில் கண்டு களியுங்கள் .


