தேசிய இளைஞர் தினத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பனை மர விதைகள் விதைக்கும் பணியை கதர் கிராம தொழில்கள் ஆணைய அதிகாரி அன்புச் செழியன் தொடங்கி வைத்தார் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பனை மர விதைகள் விதைக்கும் பணியை கதர் கிராமம் மற்றும் தொழில்கள் ஆணைய கோட்ட உதவி டி.வி. அன்புச் செழியன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்கவும், புயல், சூறாவளி, பூகம்பம், மண்ணரிப்பு போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்கவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும், கடற்கரை, தீவு, பகுதிகளிலும் நீர் பிடிப்பு பகுதிகளான ஆற்றங்கரை, குளத்தங்கரை, வாய்க்கால் கரை, ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும் அரசு புறம்போக்கு இடங்களிலும் விருப்பப்பட்டு கேட்ட தனியாக இடங்களில் அரசிடம் எந்தவிதமான நிதி உதவியும் பெறாமல் தன்னார்வமாக, சேவை மனப்பான்மையோடு, தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக பனை மர விதைகளை விதைத்து வருகிறார்கள்.
மேலும் இதனைத் தொடர்ந்து ஒரு கோடி இலக்கை அடைதற்காக தொடர்ச்சியாக பனை மர விதைகளை விதைக்கும் பணியில் மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தினர் மிக தீவிரமாகவும் ஈடுபட்டு, செயல்படுத்தி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு நாசரேத் அருகே உள்ள தோப்பூரில் தேரி பகுதியில் பனை மர விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் மதுரை கோட்ட உதவி இயக்குனர் டி.வி.அன்புச் செழியன் கலந்து கொண்டு பனை மர விதை நடும் பணியை துவக்கி வைத்து பேசியதாவது :- இளைஞர்கள் தங்கள் கல்வியையும், பிறர் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இளைஞர்களுக்கு மிகுந்த நம்பிக்கை வேண்டும். உடலை உறுதி செய்து கொள்ள இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இளைஞர்கள், இளம் பெண்களுக்கு சம உரிமையும் மதிப்பும் அளிக்க வேண்டும். பெண்கள் தங்களுக்கு கீழானவர்கள் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். இளைஞர்கள் தங்கள் பலம் மற்றும் பலவீனங்களை உணர்ந்து இருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் உரிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும். இளைஞர்கள் தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க, நிலத்தை நிலை மேம்படுத்த, புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் தடுக்க, தமிழர்களின் தேசிய மரமான பனை மரங்களை வளர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சிக்கு மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் அகிலா, தொழில் முனைவோர் ஆலோசகர் பேச்சியப்பன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவன உதவி இயக்குனர் செரினா பாபி,கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்,
தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தென் மண்டல ஒருங்கிணைப்பாளரும், தூத்துக்குடி மாவட்ட தலைவருமான ராஜ்கமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தன்னார்வலர்கள், சமூக ஆவலர்கள், பனை பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், தொண்டு நிறுவன இயக்குனர்கள் இளைஞர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து பனைமர விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்டனர் . மேலும் பனையை வளர்ப்பதற்கும், பனையை பாதுகாப்பதற்குமான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர.லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவனம் , லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க நிர்வாகிகள் இளைஞர் மன்ற உறுப்பினர்கள் சிறப்பாக செய்தனர்.


