தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட செய்துங்கநல்லூரில் நூலக கட்டிடம் கட்டிடம் தர வேண்டும் என்று செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் அவர்களிடம் கடந்த வாரம் நேரில் சந்தித்து மனு கொடுத்திருந்தனர். தொடர்ந்து இந்த கோரிக்கையை கடந்த நான்கு வருட காலமாக வாசகர் வட்டம் சார்பில் விடுத்து வந்தனர்.
இதற்கிடையில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் செய்துங்கநல்லூர் நூலகத்துக்கு ஆய்வு செய்ய வருகை தந்தார். அவர் அங்குள்ள பழமையான நூலக கட்டிடத்தினை பார்வையிட்டார். மேலும் நூலகத்துக்கு வருகை தரும் வாசகர்களுக்காக புதிய கட்டிடம் கட்ட பட வேண்டிய இடத்தினை பார்வையிட்டார். அதன் பின் கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் பாக்கிய லீலா, மேலாளர் மகேந்திர பிரபு, செய்துங்கநல்லூர் கிளார்க் சங்கரபாண்டியன் ஆகியோரிடம் ஆலோசனை செய்தார்.
அதன்பின் அதற்கான வரைபடத்தினை உருவாக்கும்படி பொறியாளருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அங்கிருந்தவர்களை சந்தித்து மக்கள் குறை கேட்டார்.
தவ்ஹீத் ஜமாத் சார்பில் அப்துல் செய்துங்கநல்லூரில் பாலக்காடு திருச்செந்தூர் ரயிலை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கான நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். செய்துங்கநல்லூருககு கூடுதல் துப்புறவு பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் அவர்களை பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், வாசகர் வட்ட தலைவர் திருமலை, வாசகர் வட்ட துணை தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு, நூலகர் சம்சுதீன் ஆகியோர் வரவேற்றனர்.
மாவட்ட ஆட்சி தலைவருடன் சார் ஆட்சியர் கௌரவ்குமார், நெல்லை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசக்திய வள்ளி, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், கருங்குளம் சேர்மன் ராஜேந்திரன் உள்பட பலர் உடன் வந்தனர்.


