தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட இராமானுஜம்புதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டார். தொடர்ந்து ஒவ்வொரு அரசுத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சிகளை பார்வையிட்டார்.
அதன்பின்னர் அவர் வருவாய்த்துறை, மாவட்ட இயக்க மேலாண்மை மகளிர் திட்டம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் 86 பயனாளிகளுக்கு ரூபாய் 11 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அதில் 100க்கும் மேற்பட்டோரின் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் கௌரவ்குமார், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியலீலா, இராமானுஜம்புதூர் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீரெங்கன், சேரகுளம் பஞ்சாயத்து தலைவர் செந்தில்நாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


