செய்துங்கநல்லூர் சோமசுந்தர விநாயகர் கோயில் பகதர்கள் குழு சார்பாக மார்கழி பஜனை குழுவினர் தினசரி பஜனை நிகழ்ச்சி செய்து வருகின்றனர். சேனை தலைவர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட இந்த கோயிலில் மார்கழி முதல் நாள் முதல் இந்த பஜனை நடந்து வருகிறது. இந்த பஜனை குழுவினர் பஜனை பாடி அனைத்து தெருக்களுக்கும் சென்று வந்தனர். இந்த குழுவிற்கு செல்லையா தலைமை வகித்து பஜனையை நடத்தினார். கோயில் பூஜை ஏற்பாடுகளை சோமசுந்தர விநாயகர் கோயில் அர்ச்சகர் கணேச பட்டர் செய்திருந்தார். இந்த பஜனை மார்கழி மாத இறுதி நாள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரமுகர்களும் இந்த குழுவினரை கௌரவித்து வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சேனை தலைவர் சமுதாயத்தினர் செய்து வருகிறார்கள்.


