தமிழக முதல்வர் பொங்கல் பரிசாக நியாய விலை கடையில் இன்று முதல் பொங்கல் பரிசு, கரும்பு மற்றும் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட நியாயவிலைக்கடையில் பொங்கல்பரிசு வழங்கும் நிகழ்சசி தொடங்கியது. இதனை ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்ற தலைவர் சினேகா வெள்ளி பாலமுருகன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் கொம்பையா, நகர செயலாளர் சுப்புராஜ், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கந்த சிவசுப்பு, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலமுருகன், மதிமுக நகர செயலாளர் சோம வள்ளிமுத்து, கேடிசி பொன்ராஜ், வெள்ளபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


