உலக களரி கூட்டமைப்பு (அமெரிக்கா) சார்பில் எழுத்தாளர் முத்தலாங்குறிச்சி காமராசு எழுதிய களரி அடிமுறை பாகம் 1 புத்தக வெளியீட்டு விழா சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துமனை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது.
சென்னை எழும்பூர் காவல் உதவி ஆணையாளர் ரகுபதி முதல் நூலை வெளியிட, பிரபல இதய நிபுணரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் நிறுவனருமான மருத்துவர்.தில்லை வள்ளல் பெற்றுக் கொண்டார். திரைப்பட சண்டைப்பயிற்சி இயக்குநரும், தயாரிப்பாளர் சங்க கில்ட்டு தலைவருமான ஜாகுவார் தங்கம் சிறப்புரை வழங்கினார்.
மனநல மருத்துவர் ராமசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் திரைப்படம் இயக்குனர் ராட்டினம் தங்கசாமி,செல்வக்கனி, டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மேஜர்.ராஜா டாப்டிவி ராஜா, எழுத்தாளர் பனையபுரம் அதியமான், இணை இயக்குனர்கள் ரூபன்,துணை இயக்குனர் சசி, மூன்று தலைமுறை களரி அடிமுறை ஆசான் பார்த்திபன், வேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஏற்புரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச் சங்கத்தின் தலைவர் சைமன் ஜெயக்குமார், செயலாளர் சங்கர்மணி, துணை செயலாளர் சங்கர் முத்துராமலிங்கம், செயற்குழு உறுப்பினர் திருமலை ஆகியோர் செய்திருந்தனர்.


