அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உலக களரி அடிமுறை கூட்டமைப்பு சார்பில் தமிழக கலையாம் களரியை உலகம் முழுவதும் பரப்புவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை உலக களரி அடிமுறை கூட்டமைப்பு நிறுவனர் முனைவர் ரமேஷ்( அமெரிக்கா), இணை நிறுவனர் சேகர் ஜி மனோகர் உள்பட உலக களரி அடிமுறை கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர். இதன் முதல் கட்டமாக களரியை பற்றிய நூல் எழுத எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நியமிக்கப்பட்டார். இதற்காக சி.இ. ஓ முனைவர் செந்தில் குமார் தலைமையில் களப்பணி நடந்தது. தற்போது களரி அடிமுறை முதல் பாகம் நூல் முழு வண்ண கலரில் உருவாகி உள்ளது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய இந்த நூல் சென்னை நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை கூட்ட அரங்கில் வைத்து வருகிற 8 ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. நூலை சென்னை எழும்பூர் காவல் உதவி ஆணையாளர் ரகுபதி வெளியிட , வெங்கடேஸ்வரா மருத்துவ மனை இதய நிபுணர் தில்லை வள்ளல் முதல் நூலை பெற்றுக்கொள்கிறார். திரைப்பட சண்டை பயிற்சி இயக்குனர் கலைமாமணி ஜாகுவார் தங்கம் சிறப்புரையாற்றுகிறார். நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு ஏற்புரை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.


