வள்ளலார் விழாவில் கலந்து கொள்ள ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் இருந்து மாணவிகள் வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடியில் வள்ளலார் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த 27 மாணவர்கள், 11 மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி இன்று ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் வளாகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து மாணவர்களுக்கு வள்ளலார் பற்றி குறிப்புகளை பணி நிறைவு பெற்ற காவல்துறை துணைத் தலைவர் மாசானமுத்து வழங்கி மாணவர்களை வழி அனுப்பி வைத்தார்.
மாணவர்களுக்கான போக்குவரத்து செலவுகளை சீனிவாசன் சேவா அறக்கட்டளையும், மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வெள்ளூர் விவசாய சங்க தலைவர் அலங்காரமும் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.


