தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் பயிற்சியுடன் கூடிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (03.01.2022) நடைபெறுகிறது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் மாபெரும் இளைஞர் திறன் திருவிழா இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடைபெறுகிறது. இதில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கலாம் என்றும் கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வருபவர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் நகல், மாற்றுச்சான்றிதழுன் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ac Machanic , Retails Sales , Marin fitter, Smart phone Assembley Technician, Electronic & Hardward, Asst account, Tally, Account executive, Swing machine operater, Solar PV Installer, Beautision, web design, catering, Media devoloper, Gst Account Assistant, warehouse Supervisior, ஆகிய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரப்படும்.


