கருங்குளத்தினை சேர்ந்தவர் பழனி. நல்ல வாசகர், நல்ல வாசிப்பாளர். முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அவர்களோடு நெருங்கிய பழக்கம் கொண்டவர். பல நல்ல நூல்களை வாங்கி வி.ஐ.பிகளிடம் கொடுத்து வருபவர். கடந்த முறை திருநெல்வேலி வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்£டலினிடம் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய “ஆதிச்சநல்லூர் பொருநை அருங்காட்சியகங்களும் அறிக்கைகளும்” நூலை வழங்கினார்.
புத்தாண்டையட்டி எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமரா-சு எழுதிய வளங்களை அள்ளித்தரும் வல்லநாட்டு சித்தர், தென்நாட்டு ஜமீன்தார்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் உள்பட பல புத்தகங்களை வாங்கியுள்ளார். இதற்காக செய்துங்கநல்லூரில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை சந்தித்து நூல்களை பெற்றுக்கொண்டார். இதுபோன்ற எழுத்தாளர்களை நூல் வாங்கி பெருமை படுத்தும் வாசகர்கள் இருக்கும் வரை எழுத்தாளர்கள் உற்சாகத்துடன் எழுதுவார்கள் என்பதில் ஐயமில்லை.


