தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
108 வைணவ திவ்ய தேசங்களில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சுற்றி தாமிரபரணி நதிக்கரையோரத்தில் 9 நவத்திருப்பதிகள் அமைந்துள்ளது. நவதிருப்பதி ஸ்தங்கள் என அழைக்கப்படும் இந்த ஒன்பது வைணவ தலங்களும், நவக்கிரகங்களாக கருதி வழிபடப்பட்டு வருகிறது.








சூரியனுக்கு அதிபதியாக ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், சந்திரனுக்கு அதிபதியாக நத்தம் விஜயாசனப் பெருமாள், புதனுக்கு அதிபதியாக திருப்புளிங்குடி காய்சின வேந்த பெருமாள், சனிக்கு அதிபதியாக பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள், கேதுவுக்கு அதிபதியாக இரட்டை திருப்பதி அரவிந்தலோசன பெருமாள், ராகுக்கு அதிபதியாக தேவர்பிரான் தேவபிரான், சுக்கிரனுக்கு அதிபதியாக தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர், செவ்வாய்க்கு அதிபதியாக திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் குருவுக்கு அதிபதியாக ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் என ஒன்பது சிறப்பு பெற்ற தலங்கள் உள்ளது. இந்த நவத்திருப்பதி ஸ்தலங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
வைகுண்ட ஏகாதசி தினமான இன்று இந்த நவத்திருப்பதி கோவில்களில் பெருமாள் தேவியருடன் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதற்காக அனைத்து நவத்திருப்பதி ஸ்தலங்களிலும் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் தேவியருடன் அலங்கரிக்கப்பட்டு சயன கோலத்தில் காட்சி அளித்தார். கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே வருகை தந்த வண்ணம் உள்ளனர். ஒரே நாளில் 9 பெருமாளையும் தரிசனம் செய்வது சிறப்பாகும். எனவே பக்தர்கள் 9 நவத்திருப்பதி ஸ்தலங்களிலும் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காக திருநெல்வேலி, திருச்செந்தூர், தூத்துக்குடி போன்ற பெரு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மாலையில் சயன கோலம் கலைத்து புறப்பாடு புறப்பாடு நடைபெறும். அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் பரம்பதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறந்து ஆழ்வார்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் சொ£¢க்கவாசல் திறப்பு நடைபெற்று ஆழ்வார்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.


