இந்த வருடம் முதல் நாள் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு எனது ஸ்டுடியோவை மூடவேண்டும் என்று நினைத்த போது கர்நாடக மாநிலம் உடுப்பி கே.ஜி.என். நகர் 9 வது தெருவை சேர்ந்தவர் ஜெனி ஜாய், அவரது மகன் ரோகன் ஜாய். வந்தவர்கள் அருகில் உள்ள ஆலயத்தின் போதகரை பார்க்க வேண்டும் என ஆங்கிலத்தில் என்னிடம் கூறினார். அவர்களுக்கு ஆங்கிலம் சரளமாக பேசவருகிறது. கொங்கனி பாஷையும் பேசுகிறர்கள். ஜெனியின் தாயார் தமிழர் என்றும், தந்தையார் மலையாளி என்றும், சிறு வயதிலேயே கர்நாடக மாநிலம் சென்று விட்ட காரணத்தினால் தனக்கு தமிழ் மலையாளம் பேச தெரியவில்லை என்றும் கூறிக்கொண்டார். வருட முதல் நாள் என்பதால் போதகர் அய்யாவுக்கு வேலை அதிகமாக இருந்த காரணத்தினால் அவரை பார்க்க முடியவில்லை. இதற்கிடையில் தான் உடல் சரியில்லாத காரணத்தினால் திருவனந்த புரத்தில் தனக்கு மருத்துவம் எடுக்க வந்த போது முதல் வகுப்பு ரயிலில் தீடீரென்று ஏறிய வடநாட்டு வாலிபர்கள் தங்களது உடமைகளை பணம் ,செல்போன் ,உடை உள்பட அனைத்தையும் தூக்கிக்கொண்டு சென்று விட்டனர். சுமார் 15 வருடங்களுக்கும் முன்னால் ஒரு நண்பர் செய்துங்கநல்லூரில் வசித்து வந்தார். அவரை சந்தித்து உதவி கேட்கலாம் என வந்தோம், அவரை கண்டுபிடிக்க போன் எண்ணும் இல்லை என்று கூறினார். எனவே நான் உடனே கேரளாவை தலைமையிடம்£க கொண்டு இயங்கும் தாதன்குளம்( தெற்கு காரசேரி) பெத்தெல் அனாதை விடுதியர் இல்லத்தினை தொடர்பு கொண்டேன். எம்.ஜி. பி. கருணா சென்டர் என அழைக்கப்படும் அந்த நிறுவனத்தில் தலைவர் அருட் தந்தை யோகனன் டேனியல் , வார்டன் அருட்தந்தை சிபின் கே. நிக்சன் ஆகியோர் உடனே செய்துங்கநல்லூருக்கு தங்கள் காரில் கிளம்பி வந்து விட்டனர். அங்குள்ள நிலமையை புரிந்து அந்த பெண்ணுக்கு உதவினர். அவர்கள் தங்களது காரில் நெல்லை ரயில் நிலையம் கூட்டிச்சென்று அவர்களுக்கு உடுப்பி செல்ல டிக்கெட் எடுத்துக்கொடுத்து, செலவுக்கு பணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதில் என்ன விசேசம் என்றால் தனது உடமைகள் காணவில்லை என்று புகார் கொடுக்க ஜெனி மறுத்து விட்டார். அதற்கு காரணம் கோவில்பட்டி ஸ்டேஷனில் இவர் புகார் கொடுக்க சென்று போது சரியான உதவி கிடைக்காதது தான் ஏற்பட மனவருத்தம் தான். தற்போது வடநாட்டு வாலிபர்கள் ரயிலில் கை வரிசை காட்டுவது சகஜமாகி வருகிறது. சாதா டிக்கெட் எடுத்து முதல் வகுப்பில் ஏறி, அங்கு டி.டி.ஆர் மூலம் டிக்கெட்டை உறுதிªச்யது பயணம் செய்கிறேன் என பேரில் பணக்காரர்களின் உடமையில் கை வரிசை காட்டுகிறார்கள். ஜெனியை போன்ற ஆள்கள் புகார் கொடுக்காமல் செல்வது போல் பலர் சென்று விடுகின்றனர். எனவே அவர்களுக்கு இது மிகவும் சாதகமாக போய் விடுகிறது. ஆனாலும் தென்னக ரயில்வே காவல் துறையினர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும். வடநாட்டு திருட்டு கும்பலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த ஜெனி குடும்பத்தார், தொடர்ந்து ஏற்பட்ட தொழில் சரிவு காரணமாகவும், தனது கணவர் கொரோனாவால் இறந்து போன காரணத்தினாலும் படிப்படியாக கஷ்டநிலைக்கு வந்து விட்டனர். தற்போது நோயோடு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஜெனி தற்போது ஏற்பட்ட இந்த பேரிடி நண்பர்கள், உறவினர்கள் போன் எண்ணை தொலைத்து நிற்கும் அவல நிலைக்கு வந்துள்ளார். அவரை வழி அனுப்ப சென்ற அருள் தந்தையர் இருவரிடம் அவர் கண்ணீர் மல்க நன்றி கூறியது. அனைவரையும் உருக்குவதாகவே இருந்தது. என்னுடைய கோரிக்கையை ஏற்று பண உதவியோடு காரில் சென்று வழி அனுப்பி வைத்த தெற்கு காரசேரி எம்.ஜி. பி. கருணா சென்டர் நிறுவனத்தில் தலைவர் அருட் தந்தை யோகனன் டேனியல் , வார்டன் அருட்தந்தை சிபின் கே. நிக்சன் ஆகியோருக்கு நன்றி. புது வருடத்தில் முதல் நாள் உதவி மன நிறைவை தந்தது.


