கருங்குளத்தில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் பத்மநாபபிள்ளை தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைததார். அதன்பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு டிஎஸ்பி மாயவன் கோப்பைகளை வழங்கினார்.
காவல்துறையும், பொதுமக்களும் இணைந்து நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் அனைத்து பகுதிகளிலும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று டிஎஸ்பி மாயவன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் செய்திங்கநல்லூர் உதவி ஆய்வாளர் சதீஷ், கருத்தையா, முத்துராமன், மாரியப்பன், அஜய், கருங்குளம் பஞ்சாயத்து தலைவர் சங்கர், தாதங்குளம் பஞ்சாயத்து தலைவர் சுடலை, தொழிலதிபர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


