மாவட்ட நிர்வாகம் மூலமாக வெளியிடப்பட்ட “தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்” என்ற எனது நூல் தற்போது விற்பனையில் உள்ளது. அதை வாங்கி நமது மாவட்ட பெருமைகளையும், தியாகிகளின் அருமையையும் பறைசாற்றி வருகிறது. இதற்காக அனைத்து உதவிகளையும் செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி செந்தில்ராஜ் அவர்களுக்கு நன்றி. இந்த நூலை வெளிநாட்டில் உள்ளவர்கள் படிக்க ஆசைப்படுகிறார்கள். எனவே இந்த நூலை அமேசான் கிண்டிலில் தற்போது வெளியிட்டு உள்ளோம். ஏற்கனவே எனது நூல்களான “தலைத்தாமிபரணி”, முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் வரலாறு(ஆங்கிலம்), ஆதிச்சநல்லூர் ஆய்வுகள், சிவலப்பேரி சுடலை போன்ற நூல்கள் 5 ஸ்டார் அதாவது அதிகம் வாசிக்கப்பட்ட , வாசகர்களால் நேசிக்கப்ட்ட நூலாகி எனக்கு பெருமை சேர்த்துள்ளது. அதுபோலவே இந்த நூலுக்கும் ஆதரவு தர வேண்டுகிறேன். நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


