சார்ல்ஸ் பாபேஜ் அல்லது சார்லஸ் பாபேஜ் பிறப்பு- டிசம்பர் 26, 1791 – பிரித்தானிய பல்துறையறிஞர் . இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார். இவர் கணிதத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர், பகுப்பாய்வுத் தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர் என்று பல பரிமாணங்கள் கொண்டவர். வித்தியாச பொறி 1882ல் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது.இதுவே இண்றைய கணினியின் அடிப்படைத் தத்துவம். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.[2] 1991 இல் பிரித்தானிய விஞ்ஞானிகள் இவர் திட்டமிட்டபடி வித்தியாசப் பொறியினை (difference engine) வடிவமைத்தனர். அது சரியாக இயங்கியமை இவரது திறமையை நிரூபித்தது. இறப்பு- அக்டோபர் 18, 1871.
சார்ல்ஸ் பாபேஜின் கண்டுபிடிப்புகள்:
* வாகனமங்களின் வேகமானி
* கண் பரிசோதனைக்கருவி
* புகையிரதத்தின் தைனமோ மீற்றர்
* நியமத் தொடருந்துப் பாதை (railway track) அளவுக்கருவி
* சீரான அஞ்சல் கட்டண முறை
* கலங்கரை விளக்கு ஒளி
* கீறிவிச் ரேகைக் குறியீடு
* சூரிய ஒளி கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி
* மணிச்சட்டம்
* நேப்பியர் கருவி
* பாஸ்கல் இயந்திரம்
* டிபரன்ஸ் இயந்திரம்


