விருதுநகா் கந்தன் இராமசாமி ,பிறப்பு-1 சனவாி 1926. ஓர் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 1950 மற்றும் 1990 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடிப்புலகில் இவர் உச்சத்தில் இருந்தார். 1940களில் பாய்ஸ் கம்பெனி என்று அறியப்பட்ட நாடக உலகிலிருந்து திரையுலகிற்கு வந்தடைந்தவர்களில் இவரும் ஒருவர். 1947ஆம் ஆண்டு வெளிவந்த நாம் இருவர் என்ற திரைப்படத்தில் தமது 21ஆம் அகவையில் 60 அகவை கிழவராக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். விகேஆர் என பரவலாக அறியப்பட்டார். புகழடைந்தாலும் முதுமை வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது ஆண்டு திரைவாழ்வில் 500இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். 1960களிலும் 1970களிலும் முன்னணியில் இருந்த டி. ஆர். மகாலிங்கம், எம்.ஜி.யார், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், இரவிச்சந்திரன், முத்துராமன்,கமலஹாசன், இரஜனிகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார். இவருடைய வாக்குநடை, இவரை நகைச்சுவை வேடத்திலோ எதிர்மறை வேடத்திலோ சிறப்பாக நடிக்க வழி செய்தது. நகைச்சுவை நடிகை மனோரமாவுடன் இணைந்து இவர் பணி புரிந்த திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. பின்னாட்களில் 15 திரைப்படங்களை தயாரித்துள்ளார். இறப்பு -24 திசம்பர் 2002. இவர் நடித்த கடைசிப் திரைப்படம் டும் டும் டும் ஆகும்.


