தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர் பெருமாள்சாமி ஏற்பாட்டில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி தலைமையில் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி மாநில பேச்சாளர் அம்பிகாபதி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநகர் செயலாளர், இக்னேஷியஸ், டி.சி.டி.யு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், கலைப்பிரிவு தலைவர் பெத்துராஜ் எஸ்சி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு, மாவட்ட தலைவர் ராஜாராம், சாயர்புரம் சிவன்ராஜ், ஐஎன்டியூசி முனியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


