*** ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம்
பாலக்காடு – திருச்செந்தூர் ரயிலை
செய்துங்கநல்லூரில் நிற்க கோரி மனு
திருநெல்வேலி -திருச்செந்தூர் அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தொடங்கி தற்போது பணிகள் நிறைவடைந்து விட்டது.
இதற்காக இந்த ரயில்பாதையில் ஆறுமுகநேரியில் ஒரு துணை மின் நிலையமும், பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் ஆகிய பகுதிகளில் 4 உபமின் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துணை மற்றும் உபமின் நிலையங்களில் இருந்து 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மூலம் இந்த மின்சார ரயில்சேவை தொடங்க உள்ளது.
இந்த நிலையில் இந்த புதிய மின்மய ரயில் பாதையை தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் சித்தார்த்தா ஆய்வு செய்ய வருகை தந்தார். முன்பக்கத்தில் டீசல் எஞ்சினையும், பின் பக்கத்தில் மின்சார எஞ்சினையும் பொறுத்திய 6 பெட்டிகள் கொண்ட ரயில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்தது. இதில் ரயில்வே பொறியாளர்கள், பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் உடன் வந்தனர்.
அவர்கள் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் ரயில்வே பாலத்தில் பாலத்தின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் ரயில்நிலைய பகுதி, நாசரேத் உபமின் நிலையம், ஆறுமுகநேரி ரயில்வே கேட் பகுதியில் ஆய்வு செய்தனர். மதியம் 3 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து மின்சார ரயில் வெள்ளோட்டம் நடத்தப்படுகிறது.
அதன்பின்பு திருச்செந்தூரில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

மதியம் 3.20 மணி அளவில் திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வரை ஆய்வு ரயிலை மின்சார எஞ்சின் மூலம் இயக்க ரயில் மின் பாதையில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சி ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ஆய்வில் முதன்மை பொறியாளர் சித்தார்த் , மதுரை துணை பொது மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். முதன்மை பொறியாளர் சித்தார்த், மதுரை துணை பொது மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு ஆகியோரிடன் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமையில் பொதுமக்கள் மனு ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது.
செய்துங்கநல்லூர் நகரம் வளர்ந்து வரும் நகரமாகும். இந்த ஊருக்கு சுற்று பகுதியில் சுமார் 42 கிராம மக்கள் கூடும் இடமாகும். அதோடு மட்டுமல்லாமல் ஊரை சுற்றி மிக அதிகமான ஆன்மிக தலங்கள் உள்ளன. திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம், கேடிசி நகர் பகுதி மக்கள் கூட நெல்லை சந்திப்பு கூட்ட நெரிசலில் சிக்காமல் செய்துங்கநல்லூரில் வந்து ரயில் ஏறி பயணம் செய்கிறார்கள். செய்துங்கநல்லூர் இரண்டு ரயில்கள் நின்று செல்லக்கூடிய பிளாட்பார்ம் வசதி கொண்டது. அதோடு மட்டுமல்லாமல் கூடுதல் ரயிலை நிறுத்தி வைக்க கூடிய பிளாட்பார்ம் வசதியும் கொண்டது. இந்த ரயில் நிலையத்தில் எகஸ்பிரஸ் ரயில்கள் உள்பட அனைத்து ரயில்களும் நின்று செல்கின்றன. ஆனால் கொரானா காலம் வரை நின்று சென்ற திருச்செந்தூர் பாலக்காடு ரயில் தற்போது பயணிகள் ரயிலாக இயக்கப்பட்டும் கூட இப்பகுதியில் நின்று செல்வதில்லை. இந்த பகுதியில் வசிக்கும் பெரும்பாலான நபர்கள் மதுரை, பழனி மற்றும் பொள்ளாச்சியோடு தொடர்ப்பு கொண்டவர்கள். எனவே இவர்கள் தற்போது ரயில் ஏற திருநெல்வேலி நோக்கி செல்ல வேண்டியது உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் எனவே தாங்கள் தயவு கூர்ந்து அந்த ரயிலை நிறுத்தி தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியிருந்தார். அந்த மனுவை பெற்றுககொண்ட அதிகாரிகள் ஆவண செய்வதாக வாககளித்தார்கள்.
மனு கொடுக்கும் போது எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சமூக சேவகர் சுடலைமுத்து, தமிழ்நாடு தவ்கீத் ஜமாத்தை அப்துல், முருகன், சித்திரை பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


