இராமானுஜம்புதூரில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இராமானுஜம்புதூரில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
இதில் கால்நடை மருத்துவர் கணபதி கால்நடைகளுக்கு மருத்துவம் அளித்தார். குடல் புழு மருந்து கொடுத்தல், சினை பரிசோதனை மற்றும் நோய்களுக்கு சிகிச்சை அளித்தல் போன்ற செயல்பாடுகள் முகாமில் நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தது. 250க்கும் அதிகமான கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர்.


