கருங்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் தூத்துக்கு தெற்கு மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கொம்பையா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இனை செயலாளர் திருவரங்கம், ஒன்றிய கவுன்சிலர் பேச்சிமுத்து, மாவட்ட மாணவரணி மருதவிநாயகயம், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் மாயாண்டி, ஒன்றிய மாணவரணி செயலாளர் மருதுபாண்டி, ஊராட்சி செயலாளர்கள் தர்மராஜ், ராஜா, மாயாண்டி, வேல்முருகன், பிச்சைகன்னு, வல்லநாடு தம்பான், மாரிமுத்து, மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்துங்கநல்லூர் பஜாரில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாளை கொண்டாடினர்.


