தமிழ் அமுது நிகழச்சி ஒவ்வொரு சனிக்கிழமை 5 மணிக்கு இணைய வழி நிகழ்ச்சி நடந்து வருகிறது. வருகிற சனிக்கிழமை 17 ந்தேதி மாலை 5 மணிக்கு இதன் 108 வது நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் நூல் பற்றிய அறிமுக நிகழ்ச்சி நடைபெறுகிறது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு இந்த நூலைப்பற்றியும் தூத்துக்குடி மாவட்ட சிறப்புகள், தூத்துக்குடி மாவடத்தில் அறியப்படாத தியாகிகள் குறித்தும் பேசுகிறார். இந்த நிகழ்ச்சி ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் மாலை 3.20 மணிக்கும், மலேசியா சிங்கப்பூரில் இரவு 7.30 மணிக்கும் கலிபோர்னியாவில் அதிகாலை 4.30 மணிக்கும் காணலாம். மகேஸ்வரி சுப்பிரமணியம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். முனைவர் ராஜாமணி, குணா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைகிறார்கள். எழுத்தாளரை சாந்தி ராஜீ அறிமுகம் செய்து வைக்கிறார். கமலி சிவக்குமார் நன்றி கூறுகிறார். இந்த நிகழ்ச்சியில் பாவண்ணன் எழுதிய ஆனந்த நிலையம் பற்றி எழுத்தாளர் கே. பாரதி மதிப்புரை வழங்குகிறார்.


