உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டு மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பனை மர விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.
மதர் சமூக சேவை நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க புயல், சூறாவளி, பூகம்பம், மண்ணரிப்பு போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்கவும்,
மேலும் நிலத்தடி நீரை மேம்படுத்தவும், கடற்கரை, தீவு, பகுதிகளிலும் நீர் பிடிப்பு பகுதிகளான ஆற்றங்கரை, குளத்தங்கரை, வாய்க்கால் கரை, ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும் அரசு புறம்போக்கு இடங்களிலும் விருப்பப்பட்டு கேட்ட தனியாக இடங்களிலும் தன்னார்வமாக, சேவை மனப்பான்மையோடு, அரசிடம் எந்த நிதி உதவியும் பெறாமல் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக பனை மர விதைகளை விதைத்து வருகிறார்கள்.
மேலும் இதனைத் தொடர்ந்து ஒரு கோடி இலக்கை அடைதற்காக தொடர்ந்து பனை மர விதைகளை விதைக்கும் பணியில் மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தினர் மிக தீவிரமாகவும் ஈடுபட்டு, செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் இதைத் தொடர்ந்து நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளை தேரி ஒட்டிய சாலை ஓரங்களில் பனை மர விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பனை மர விதை விதைக்கும் பணியை துவக்கி வைத்தார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி,
தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தென் மண்டல ஒருங்கிணைப்பாளரும், தூத்துக்குடி மாவட்ட தலைவருமான ராஜ்கமல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். காயல்பட்டினம் நகர தலைவர் முத்துக்குமார், ஏரல் பகுதி தலைவர் சங்கர் கணேஷ், திருச்செந்தூர் நகர தலைவர் கண்ணன், மற்றும் தன்னார்வலர்கள், சமூக ஆவலர்கள்,
பனை பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், தொண்டு நிறுவன இயக்குனர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து பனைமர விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்டனர் . மேலும் பனையை வளர்ப்பதற்கும், பனையை பாதுகாப்பதற்குமான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். முன்னதாக மதர் இளம்பனைப்பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் முத்துமாரி வரவேற்றார் முடிவில் மதர் கதலி பனை பொருள்v உற்பத்தியாளர் குழு தலைவர் ஜெனிஷா நன்றி கூறினார் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க நிர்வாகிகள் சிறf-ப்பாக செய்தனர்.


