உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் கிராம உதயம் பொது மேலாளர் – அறங்காவலர் திருமதி.தமிழரசி அவர்களின் 5 வது நினைவு தினத்தை முன்னிட்டு கிராம உதயம் கோபால சமுத்திரம் அரசு மருத்துவமனை அம்பாசமுத்திரம் மற்றும் பத்தமடை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ஏழை எளிய நலிவுற்ற மக்களுக்கு இலவசமாக இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இன்று கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வை கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்கள். கிராம உதயம் மேல ஆழ்வார் தோப்பு நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் மற்றும் தலைமை அலுவலக நிர்வாக மேலாளர் மகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் வரவேற்புரை வழங்கினார். அம்பாசமுத்திரம் இரத்த வங்கி அலுவலர் மருத்துவர் ராஜேஷ்வரி பத்தமடை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் ஷைலா ஆகியோர் இரத்த தானம் வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து கருத்துரை ஆற்றினார்கள். கிராம உதயம் தனி அலுவலர் ராமச்சந்திரன் சுகாதார மேற்பார்வையாளர் பூங்கொடி சுகாதார ஆய்வாளர் அக்பர் அலி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் நன்றியுரை வழங்கினார்கள்.நிகழ்வில் 86 நபர்கள் தங்கள் இரத்தத்தை கொடையாக வழங்கினார்கள்


