கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது. போட்டியை தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டில் கிள்ளிகுளம், குடுமியான்மழை, செட்டிநாடு, கலவை, வாசுதேவநல்லூர், காரைக்குடி, ராமநாதபுரம், ராதாபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை ஆகிய 10 வேளாண்மை கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர்.
இதில் பேட்மிட்டன், பால் பேட்மிட்டர், பேஸ்கட் பால், செஸ், டேபிள் டென்னிஸ், வாலிபால், கிரிக்கெட், புட்பால், ஹாக்கி, கபடி போன்ற போட்டிகள் நடைபெறுகிறது. இன்று முதல் மூன்று தினங்கள் நடைபெறும் இந்த போட்டியில் திங்கள் கிழமை வரை நடைபெறுகிறது.
வெற்றி பெறும் அணிகளுக்கு திங்கள் கிழமை பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


