திருநெல்வேலியில் இருந்து அரசு பேருந்து ஒன்று தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ராமானுஜம்புதூருக்கு இன்று மாலை வந்தது. அப்போது அந்த பேருந்து ராமானுஜம்புதூர் வந்ததும் நடத்துனர் பேருந்தை தூய்மைப்படுத்தும் போது அதில் ஒரு மணிபர்ஸ் சீட்டில் மணிபர்சு கிடந்துள்ளது. அந்த மணிபர்சில் 2,750 பணம் மற்றும் ஆவணங்களும் இருந்தது. இதனைக் கண்ட பேருந்து ஓட்டுனர் அருணாச்சலம் மற்றும் நடத்துனர் மாடசாமி ஆகியோர் சேரகுளம் காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் மணி பர்ஸ் மற்றும் பணத்தை ஒப்படைத்தனர்.
உடனே காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி துரைசிங் பணத்தை தவறவிட்ட பெண்ணிடம் ஒப்படைத்தார். மேலும் கீழே கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


