தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நாற்காலி வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா, காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட ஓடக்கரையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் 10 ஆண் குழந்தைகளும் 15 பெண் குழந்தைகளும் மொத்தம் 25 குழந்தைகள் படித்து வருகிறார்கள் குழந்தைகளுக்கு நாற்காலி வசதி இல்லாமல் தரையில் அமர்ந்து படித்து வந்தனர். தரையில் அமர்ந்து படிப்பது குழந்தைகளுக்கு சிரமமாக இருந்து வந்தது. இதனை அறிந்த தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜ்கமல் நாற்காலி வழங்க ஏற்பாடு செய்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கவாடி குழந்தைகளுக்கு நாற்காலி வழங்கும் விழா ஓடக்கரை அங்கன்வாடி மையத்தில் வைத்து நடைபெற்றது நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைவரும் தென் மண்டல ஒருங்கிணைப்பாளருமான ராஜ்கமல் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் ராமஜெயம்,
லீடூ டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி, பனை பாதுகாப்பு இயக்க காயல்பட்டினம் நகர செயலாளர் காயல் பாலா ஆகியோர் முன்னிலைவகித்தனர்
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தின் மாநில தலைவரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி குழந்தைகளுக்கான 25 நாற்காலிகளை அங்கன்வாடி பணியாளர் முத்துலட்சுமிடம் வழங்கினார். மேலும் அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்
முன்னதாக அங்கன்வாடி உதவியாளர் வளர்மதி அனைவரையும் வரவேற்றார். முடிவில் அங்கன்வாடி பணியாளர் முத்துலட்சுமி, நன்றி கூறினார்.
இதில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க காயல்பட்டின நகர தலைவர் முத்துக்குமார் சமூக ஆர்வலர்கள் தன்னோடு கலந்து கொண்டனர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜ்கமல் சிறப்பாக செய்திருந்தார்


