தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வரும் மாணவிகளான பண்டாரபுரத்தை சேர்ந்த கார்த்திகா மற்றும் கொழுந்தட்டு பகுதியை சேர்ந்த எப்சிபா. இவர்கள் இருவரும் ஒரே வகுப்பறையில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ள நிலையில் 10 நாட்கள் மாணவிகள் வீட்டிலிருந்து படிக்க வேண்டும் என்பதற்காக கல்லூரியில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாணவிகள் எப்சிபா மற்றும் கார்த்திகா ஆகியோர் இணைபிரியாத தோழியாக இருந்த நிலையில் இந்த 10 நாட்கள் தனது தோழியை விட்டு பிரிந்து இருக்க மனமில்லாத நிலையில் இந்த 10 நாட்களும் தாங்கள் வீட்டை விட்டு வேறு எங்காவது சென்று வேலை தேடி அங்கு பணியில் சேரலாம் என எண்ணி இருவரும் கடந்த 23ஆம் தேதி தங்களது வீடுகளில் கல்லூரி தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்காக வங்கிக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி சென்ற இருவரும் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளனர்.
வீட்டிலிருந்து சென்று வெகு நேமாகியும் மாணவிகள் தங்களது வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள், இது குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பயிற்சி உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையிலான தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறங்கிய பயிற்சி உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையிலான தனிப்படை குழுவினர் மாணவிகள் காணாமல் போன அன்றைய தினம் சாத்தான்குளம் நகர் முழுவதும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மேலும் இரு மாணவிகளில் ஒரு மாணவியின் செல்போன் எண் திருச்சியில் இருப்பதாக லொகேஷன் காண்பித்துள்ளது.
அதன்பேரில் தனிப்படை போலீசார் திருச்சிக்கு விசாரணைக்காக சென்றனர். மீண்டும் மாணவியின் அதே செல்போன் எண் திருநெல்வேலி நோக்கி வருவதாக அறிந்த போலீசார் மீண்டும் திருநெல்வேலிக்கு நோக்கி வந்தனர். அதன் பின்னர் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இதனால் கடந்த ஒரு வார காலமாக திருச்சி, மதுரை, கோவில்பட்டி, உள்ளிட்ட இடங்களில் தனிப்படை போலீஸ் குழுவினர் மாணவிகள் இருக்கும் இடம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அந்த மாணவிகள் மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பயிற்சி எஸ்ஐ வெங்கடேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த விடுதிக்கு சென்று காணாமல் போன இரு மாணவிகளையும் மீட்டு சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு நள்ளிரவு 2 மணியளவில் அளவில் அழைத்து வந்தனர்.
அங்கு சாத்தான்குளம் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பெண் காவலர்கள் அந்த மாணவிக்கு உரிய அறிவுரை கூறி அவர்களின் பெற்றோரிடத்தில் அனுப்பி வைத்தனர்.


