தூத்துக்குடி ஏவிஎம் கமலவேல் திருமண மண்டபத்தில் 3வது புத்தகத்திருவிழா கடந்த வாரம் தொடங்கியது.
இந்த புத்தகத்திருவிழாவில் நாள்தோறும் கலைநிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்த நிலையில் புத்தகத்திருவிழாவில் இன்றைய தினம் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் புத்தகம் வெளியிட்டு விழா இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். புத்தகத்தினை எம்.பி கனிமொழி வெளியிட்டார். அதனை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், சப் கலெக்டர் கௌரவ்குமார், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட சேர்மன் பிரம்மசக்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.


