தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்ச்சி நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாளை கலைஞரின் அனைத்து கிராமங்கள் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகள் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டறிந்தார்.


