கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ஆலோசனைப்படி கருங்குளம் ஒன்றியத்தில் பள்ளி அளவிலான போட்டிகள் அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 23ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் நுண்கலை, இசை வாய்ப்பாடு, இசைப்போட்டி, நடனம், நாடகம், மொழித்திறன், கவிதை புனைதல், நடைபெறுகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இன்று கலைத்திருவிழா நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சுதாகர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று நடந்த கட்டுரைப் போட்டியை ஆசிரியர் பயிற்றுநர் ராஜேந்திரன் மற்றும் வட்டார கலை திருவிழா ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரி ஆகியோர் பார்வையிட்டனர்.


