தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மகாலில் இன்று 22 முதல் 29 ந்தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இந்த புத்தக கண்காட்சியை கனிமொழி எம்.பி திறந்து வைத்து பேரூரையாறினார். மாவட்ட ஆட்சி தலைவர் மரு. கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தார் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ் .கண்ணபிரான் வரவேற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், சார் ஆட்சியர் கௌரவ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்தக திருவிழாவை தொடக்கி வைத்து கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதா ஜீவன், ஆகியோர் பேரூரை ஆற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் ஒட்டப்பிடாரம் சண்முகையா, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிகளை கீழபூவாணி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரபாபு தொகுத்து வழங்குகிறார்.
முன்னதாக புத்தக கண்காட்சி ஸ்டால்களில் கனிமொழி எம்.பி பார்வையிட்டார். அதன் பின் 24 மணி நேரமும் வாசிப்பு இயக்கத்தினை துவக்கி வைத்தார்.

மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில் நூல் வாங்கும் ஒவ்வொருவருக்கும் மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது. அதையும் கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார். மரக்கன்றை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பெற்றுக்கொண்டார்.


