திருநெல்வேலி கேடிசி நகரில் “விதைப்போம் வளர்ப்போம்” இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட கேடிசி நகர் மற்றும் நெடுஞ்சாலையை “எழில்மிகு பசுமைமிகு” நகரமாகவும் மற்றும் சாலையாகவும் மாற்றுவதற்காக கங்கை கொண்டான் டிபி சோலார் நிறுவனம், “விதைப்போம் வளர்ப்போம்” இயக்கம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட கேடிசி நகரில் மரம் நடும் பணி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நடைப்பயிற்சி நண்பர்கள் குழு “விதைப்போம் வளர்ப்போம்” இயக்கத்தின் தலைவர் சாத்தான்குளம் வட்டாட்சியர் கே லெனின் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார்,
பிஎஸ்என்எல் டிஜிஎம் மணிமாறன், ஆசிரியர் வேலாயுதம். புவியில் ஆராய்ச்சி மைய இளங்கோ,சமூக ஆர்வலர் வழக்கறிஞர் அன்பு (என்ற) அங்கப்பன்,போக்குவரத்து துறை (ஓய்வு) சின்ன பாண்டி வங்கி மேலாளர் (ஓய்வு) ஜெயசேகர் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
சிறப்பு விருந்தினராக கங்கை கொண்டான் டிபி சோலார் நிறுவனத்தின் அதிகாரி மரியதாஸ் கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கேடிசி நகர் அரசு போக்குவரத்து பணிமனை (டெப்போ) முதல் மேம்பாலம் வரை தெற்கு பகுதி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் சுமார் ஐந்து வருடங்கள் உருவாக்கப்பட்ட 6 அடி முதல் 10 அடி வரையிலான புங்கை மற்றும் வேம்பு பெரிய வகையான 114 மரக்கன்றுகள் நடப்பட்டது
இதில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி டார்லிங் நகர் பகுதியைச் சார்ந்த கண்ணன், சங்கர் கணேஷ். சுப்பிரமணியன். பாலகிருஷ்ணன். தூத்துக்குடி சுந்தராஜ், அதிர்ஷ்டராஜ். விஜயா மணிகண்ட ராஜ். விஜய கிருஷ்ணன். ஐயப்பன் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. மேலும் இதனைத் தொடர்ந்து அனைத்து மரக்கன்றுகளுக்கும் லாரியில் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டது. மேலும் இப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நடைப்பயிற்சி நண்பர்கள் குழுவினரின் “விதைப்போம்” “வளர்ப்போம் ” இயக்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்


