செய்துங்கநல்லூரில் 4 கோடி மதிப்பில் புதிய ஒன்றிய அலுவலகம் அடிக்கல் நாட்டு விழாவை கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். காணாமல் போன ராணுவ வீரரை கண்டுபிடிக்க நிச்சயம் நடவடிக்கை. கனிமொழி எம்.பி. உறுதி.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் கருங்குளம் ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் மிகவும் பழமையானது. எனவே இந்த அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டத்தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து புதிதாக 4 கோடி மதிப்பில் புதிய ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து இன்று ரூபாய் 4 கோடி மதிப்பில் புதிதாக ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் பணியை தொடங்கி வைக்க தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வருகை தந்தார். அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் உடன் வந்தனர். அவர்கள் அலுவலக வளாகத்தில் அடிக்கல் நாட்டினர்.
இதற்கிடையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் இருந்து ஜம்முகாஷ்மீருக்கு ராணுவப்பணிக்கு சென்ற அண்ணாத்துரை என்ற ராணுவ வீரர் பணிக்கு சென்றபோது காணாமல் போனார். தனது தம்பியை கண்டுபிடித்து தருமாறு அவரது அக்காள், கனிமொழி எம்.பியிடம் மனு அளித்து கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த கனிமொழி நிச்சயம் அவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பாக்கியலீலா, உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரபிரபு, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் மைதிலி, மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகப்பெருமாள், தலைமை செயற்குழு ஜெயக்குமார் ரூபன், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், கருங்குளம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கிபாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, விவசாய சங்கத்தலைவர் குமார், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர், இராமானுஜம்புதூர் ரெங்கன், விட்டிலாபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெயபதி, பஞ்சாயத்து எழுத்தர்கள் சங்கரபாண்டியன், இசக்கிமுத்து, கருங்குளம் சுயம்பு, சேரகுளம் கணேசன், செய்துங்கநல்லூர் பட்டன், முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


