சின்ன அண்ணாமலை,ஜூன் 18 1920 – ஜூன் 18 1980 தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்
1944 ல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு விழாவில் ரூ.20,000 நிதி திரட்டி பண முடிப்பு அளித்தார் அண்ணாமலை. அவ்விழாவில் ராஜாஜி “சின்ன அண்ணாமலை” என்று அழைத்தார். அதுவே அண்ணாமலையின் பெயராக பிரபலமானது. இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. டி.கே.சி., கலில், டி.எஸ்.சொக்க லிங்கம், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். “சங்கப் பலகை” என்ற வாரப்பத்திரிகையும் நடத்தினார்.தமிழ்ப் பண்ணை’ பதிப்பகம் பொறுப்பாளராகவும் இருந்தவர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஒ சிறுவயல் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது பெற்றோர் ‘பாங்கர்’ நாச்சியப்ப செட்டியார்- மீனாட்சி தம்பதியினர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி கூட்டம் போட்டதால் கைது செயபட்டார். திருவாடானை சிறையில் அடைக்கபட்ட இவரை பொதுமக்கள் சிறையை உடைத்து மீட்டனர். சிவாஜி கணேசனின் தீவிர இரசிகரான இவர் அவருக்கு இரசிகர் மன்றத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்தார். 18 சூன் 1980 அன்று இவரது அறுபதாம் ஆண்டு விழாவின்போது இவருக்கு நடந்த அபிசேக சடங்கின்போது ஏற்பட்ட உயர் இரத்த அழுத்தத்தினால் இறந்தார்.”ஐந்து லட்சம்’, “கடவுளின் குழந்தை’, “தங்க மலை ரகசியம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளர்.


