கொடுக்காப்புளி செல்வராஜ் இறப்பு: ஜுன்12, 2014, அகவை 56 தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர். மேடை நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்.
கொடுக்காப்புளி செல்வராஜின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஆகும். சென்னை அருகேயுள்ள மாங்காடு பகுதியில் வசித்து வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான இவர், துணை நடிகர் ஏஜெண்டுகளின் தலைவராகவும் இருந்தார்.இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.


