ஏரல் அருகே மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள அம்பாள்தோப்பு, புதுமனை தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் முத்து சரவணன் (26). இவர் தினசரி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் தம்பதியருக்குள் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் முத்து சரவணன் நேற்று வீட்டில் தூக்கிட்டுத் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


