உலக சுற்றுச்சூழல் தினத்தில்
மதர் சமூக சேவை நிறுவனம்
ஒரு கோடி பனைமர விதை நடும் பணியில் விதைக்கப்பட்ட பனை மர விதைகளை ஆய்வு பணி துவக்கம்
உலக சூழல் தினத்தை முன்னிட்டு மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனை மர விதைகள் விதைக்கும் பணியில் விதைக்கப்பட்ட பனை மர விதைகள் எந்தளவு முளைத்துள்ளன என ஆய்வு செய்யும் பணி மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனைத் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமையில் குழுவினர் ஆய்வு செய்யும் பணி துவங்கியது.
தமிழகளின் தேசிய மரமான பனை மரத்தை பாதுகாக்கவும், தமிழர்களின் பாரம்பரியத்தை நிலைநாட்டவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும், புயல், சூறாவளி, பூகம்பம், மண்ணரிப்பு போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்கவும், பனைத் தொழிலை மேம்படுத்தவும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக பனைமர விதைகளை விதைத்து வருகின்றனர். இதில் குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளாக ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும். என்பதற்காக மிகத் தீவிரமாக சேவையால் செயலாற்றி தூத்துக்குடி மாவட்டத்தில் பனை மர விதைகளை (2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி முதல்) தொடர்ந்து கடற்கரை, தீவு பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஆற்றங்கரை, குளத்தங்கரை, வாய்க்காங்கரை பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும், தனியார் பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் முழுக்க, முழுக்க சேவை மனப்பான்மையோடு, எந்தவித நிதியுதவியும் பெறாமல், தன்னார்வத்துடன் பனை மர விதைகளை விதைத்து வருகின்றனர். இந்த சீரிய முயற்சியால் தற்போது வரை 69 லட்சத்து 93 ஆயிரத்து 493 பனை மர விதைகளை விதைத்துள்ளனர்.
இந்நிலையில் விதைக்கப்பட்ட பனைமர விதைகள் எவ்வாறு முளைத்து ,வளர்ச்சி அடைந்துள்ளன என்பதை ஆய்வு செய்யும் பணி காயல்பட்டணம் கடற்கரை பகுதியிலிருந்து துவங்கியது. ஆய்வு செய்யும் பணியை மதர் சமூக சேவை நிறுவன தலைவர் வழக்கறிஞர் அ.சதீஷ் பாலன் துவக்கி வைத்தார்.
இப்பணி மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனை தொழிலாளர் மேம்பாட்டு நிறுவனம் மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்கள் தலைமையில் குழுவினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனைத் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில செயலாளர் டேனியல் மோசஸ், துணைத்தலைவர் லிங்கராஜ், மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ் பானுமதி உள்பட பனை பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், உழவர் ஆர்வலர் குழு, உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், இளைஞர் மன்ற நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட கலந்து கொண்டனர்.
ஆய்வுப்பணி காயல்பட்டினம் கடற்கரையில் துவங்கி திருச்செந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கந்தசாமி புரம், கணேசபுரம், ஆலந்தலை, குலசேகரபட்டினம், மணப்பாடு, கடற்கரை பகுதிகளிலும், சாத்தான்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியதாழை, புத்தன் தருவை, செட்டி விளை, படுக்கப்பத்து, சங்கரன் குடியிருப்பு, ஞானியார் குடியிருப்பு, கொம்மடிக்கோட்டை, தட்டார்மடம், முதலூர், உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீர் காட்சி, தண்டபத்து, செட்டியாபத்து, லட்சுமிபுரம், மெஞ்ஞானபுரம், சத்யா நகர், கல்விளை பகுதிகளிலும், ஆழ்வார்திருநகரி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளிலும் , பேய்குளம், மீரான் குளம், பழனியப்பபுரம், அரிவாள் மொழி, அம்பலசேரி, கருங்கடல், உட்பட்ட பகுதிகளிலும், ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்க்குட்பட்ட பகுதிகளிலும், மேலும் கடற்கரை பகுதிகளிலும் ஆற்றங்கரை, வாய்க்கால்கரை, குளத்தங்கரை, சாலை ஓரங்களிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும், தனியார் கல்லூரி வளாகங்களிலும் ஆய்வு பணி நடைபெற உள்ளது


