தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அணியாபரநல்லூரில் தனியார் பொறியியல் கல்லூரியில் கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியின்போது ஏரல் பெண் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா பேசுகையில், கல்லூரி மாணவர்கள் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் பைக் ரேஸில் ஈடுபடக்கூடாது, இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களை கூட்டி கொண்டு வேகமாக செல்ல கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் ஊரடங்கிற்கு பின்னர் இளைஞர்கள் அதிக அளவில் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் எனவும், அது போல நீங்கள் இருந்துவிடக்கூடாது. மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என கூறி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
இந்த நிகழ்வின்போது கல்லூரியின் சேர்மன், முதல்வர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


